இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
அதிலும் இந்நோயானது தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை இந்நோயால் தமிழகத்தில் மட்டும் 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனாவால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயால் பலியாகியுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் மொத்தமாக 12 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.