அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை

புதுக்கோட்டையில் நேற்று காணாமல் போன 7 வயது சிறுமி ஆள் நடமாட்டம் இல்லாத குளக்கரையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் எல்லையில் உள்ள அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகூரான் (தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர்) இவர்களது 7 வயது மகள் நேற்று செவ்வாய் கிழமை முதல் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை பதிவு செய்த போலலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் புதன் கிழமை மாலை அதேபகுதியில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரையில் கொடிகள் அடர்ந்த இடத்தில் நேற்று காணாமல் போன சிறுமி சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டது. 

மேலும் சிறுமி உடலில் கால் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளதும் காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணி நடந்தது.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் கடை வைத்துள்ள 27 வயது இளைஞன் ஒருவரை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அப்பொழுது அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே