தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்க மசோதா தாக்கல்..!!

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கச் செய்யும் சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

இதற்கிடையில் அந்த மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கும் சட்ட மசோதாக்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்‍.நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே