கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டபள்ளி என்ற இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

கர்நாடத்தைச் சேர்ந்தவர்கள் டிராக்டரில் கோயிலுக்குச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உரிகம் அருகே உள்ள தப்பகுளி காட்டுப்பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர், அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக எல்லையையொட்டி விபத்து நடந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் கர்நாடக மாநிலம் கனகபுரா அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே