சசிகலா பற்றி ரஜினிகாந்த் விசாரித்தார் – டிடிவி தினகரன் பேட்டி..!!

சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை திநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் கூறியதாவது; சின்னம்மாவுக்கு கூடிய தொண்டர்கள், மக்கள் கூட்டம், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் மனதில் இருந்து வெளிப்படுத்துகிறது.

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

கர்நாடகாவிலும், தமிழகத்திலும் தன்னெழுச்சியாக வரவேற்பு நிகழ்த்திய தொண்டர்களுக்கு நன்றி. அம்மாவின் உண்மை தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் பொது மக்களுக்கு நன்றி.

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது என்றார்.

மேலும் பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர்செல் உள்ளனர்.

உறவினர் என்ற முறையில் தான் சசிகலாவை பார்க்க வந்தேன்.

மேலும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2 பகுதிகளில் தான் போட்டியிடப் போவதாகவும் ஆர்கேநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியை தேர்வு செய்திருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே