5.8 அடி உயரத்தில் எஸ்.பி.பி-யின் தத்ரூப சாக்லெட் சிலை..!!

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, சாக்லெட் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள Zuka என்ற சாக்லெட் பேக்கரியில் முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பணிபுரிந்து வருபவர் செஃப் ராஜேந்திரன். இவர் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், கடந்த காலங்களில் சாக்லெட்டை கொண்டு ரஜினிகாந்த் உருவம், ரயில், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தனின் ஆகியோரின் உருவங்களை சாக்லேட்டுகளை கொண்டு தயாரத்துள்ளார்.

இந்நிலையில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டையொட்டி மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும்; அவரது நினைவை போற்றும் வகையிலும், 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளனர்.

161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் உருவம் சாக்லெட் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் சிலை ஜனவரி 3-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சாக்லேட்டை கொண்டு தனது கலைத்திறமையை நிரூபித்து வருகிறார்.

சாக்லெட்டில் புதுமையை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சாக்லெட்டாலான சிலைகளை உருவாக்கி வருவதாக செஃப் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே