அரசு மருத்துவமனைகளில் இதுவரை 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்..விஜயபாஸ்கர்!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்தாவது, ” உள்நோயாளிகளாக 27.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் முதல் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 1,80,571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளது.

பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசரச் சிகிச்சை மையங்களில் 1,29,206 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் 33,374 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே