கரோனா புதிய பாதிப்பு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 81% பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் (40,715) இந்த மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,645 பேரும், பஞ்சாபில் 2,299 பேரும், குஜராத்தில் 1,640 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் (40,715) இந்த மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது 3,45,377 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,84,612 முகாம்களில்‌ 4,84,94,594 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று வரை நான்கு கோடிக்கும் அதிகமானோருக்கு (4,06,31,153) செலுத்தப்பட்டுள்ளது. 78,59,579 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 49,59,964 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 82,42,127 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 29,03,030 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 42,98,310 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,02,31,137 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக (95.67%) இன்று பதிவாகியுள்ளது.‌ கடந்த 24 மணிநேரத்தில் 29,785 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே