நடிகர் சூர்யா வில்லனாகவும் கலக்கிய 24 படம் வெளி வந்து 4 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யாவே நடித்து தயாரித்த படம் 24. இந்தப் படம் கடந்த 2016ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி வெளியானது.
இதில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர. டைம் ட்ராவல் குறித்த இப்படத்தில் நடிகர் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.
அதில் ஒருவர் வில்லன். 24 படத்தின் மூலம் வில்லனாகவும் கலக்கியிருந்தார் சூர்யா. அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.
24 படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் 2 தேசிய விருதுகள் கிடைத்தன.
அதனை தொடர்ந்து எடிசன் விருதுகள், ஜீ சினிமாலு விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது