#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 20) 4985 பேருக்கு கொரோனா உறுதி; 70 பேர் பலி

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,985 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, புதிதாக 4,985 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,298 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 70 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே