வேட்புமனு தாக்கல் செய்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

1984 முதல் 8 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள ஸ்டாலின் இதுவரை 2 முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார்.

சென்னை- கொளத்தூர் தொகுதியில் 2011, 2016 தேர்தல்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 9 ஆவது முறையாகவும் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தோதல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே