திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்குச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

ஒடுக்கப்பட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ், கடந்த மே 23-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.

இந்த ஜாமின் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே