3ஆவது மாடியிலிருந்து சிறுவன் கீழே விழுந்து பலி

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம் அலெக்ஸ் நகர் மெயின் ரோடு RC அபார்ட்மெண்டில் வசிப்பவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி இவர்களுக்கு கார்த்தி மற்றும் வசந்தகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் வசந்தகுமார் அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து வசந்தகுமார் கீழே விழுந்து இறந்தான்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த மாதவரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் போது மாடியில் இருந்து வசந்தகுமார் தவறி விழுந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்தனர்.

ஆனால் மாடியில் உள்ள சுற்று சுவரை போலீசார் ஆய்வு செய்தபோது அது பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். உண்மையில் வசந்தகுமார் தவறி விழுந்து தான் பழி ஆனானா?? அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டானா??? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே