#BREAKING | டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு..!!

டெல்லியில் கொரோனா பரவல், கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதால் மேலும் 1 வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 357 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.

டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 24,000- த்தை கடந்ததாக உள்ளது.

டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 13,898.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. 

தற்போது மேலும் 1 வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் அடுத்த திங்கள்கிழமை அதிகாலை 5 மணிவரை லாக்டவுன் அமலில் இருக்கும்.

மேலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விவரங்களுக்காக தனி இணைய தளம் தொடங்கப்பட்டு 2 மணிநேரத்துக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே