சைலன்ட் ஆக 2 ஸ்மார்ட்போன்கள்; சாம்சங்.. நீ கில்லாடி தான்பா!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 51 எஸ் 5 ஜி மற்றும் கேலக்ஸி ஏ 71 எஸ் 5 ஜி எனும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் சைலன்ட் ஆக இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் மீது பணியாற்றி வருவதாகவும், அவைகள் சாம்சங் கேலக்ஸி A51s 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி A71s 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாடல் நம்பர் SM-A516V என்கிற ஒரு சாம்சங் கேலக்ஸி A51 5G மாறுபாடும், மாடல் நம்பர் SM-A716V என்கிற ஒரு கேலக்ஸி A71 5G மாறுபாடும் தரச்சான்றிதழ் தளமான கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் முறையே சாம்சங் கேலக்ஸி ஏ51எஸ் 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ71எஸ் 5ஜி என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாடல் பெயர்களை மட்டுமின்றி வெளியான கீக்பெஞ்ச் பட்டியலானது வரவிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களின் முக்கிய விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மற்றும் குவால்காம் ப்ராசஸரை கொண்டிருக்கும்.

கீக்பெஞ்ச் பட்டியலில் SM-A516V எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ள புதிய சாம்சங் கேலக்ஸி A51 5G ஸ்மார்ட்போனின் மாடல் எண்ணின் ஏற்பாட்டின் அடிப்படையில் ஆராயும்போது, முன்னரே குறிப்பிட்டபடி இது சாம்சங் கேலக்ஸி ஏ51எஸ் 5ஜி ஆக இருக்கலாம் என்றும், மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்கக்கூடும் என்று கீக்பெஞ்ச் பட்டியல் அறிவுறுத்துகிறது. இது 1.8GHz அடிப்படையிலான ப்ரெக்வஎன்சி கொண்ட குவால்காம் ப்ராசஸர் கொண்டு இயங்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மதர்போர்டு ‘லிட்டோ’ என பட்டியலிடப்பட்டுள்ளது – இது ஸ்னாப்டிராகன் 765 ஜி ப்ராசஸருக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் குறியீட்டு பெயர் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி அளவிலான ரேமை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ51எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் அதன் சிங்கிள் கோர் சோதனையில் 622 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 1,928 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போனைப் பற்றி இதுவரை அறியப்பட்ட வேறு தகவல்கள் எதுவும் இல்லை.

இதேபோல், தரப்படுத்தல் தளத்தில் SM-A716V என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்ட புதிய சாம்சங் கேலக்ஸி A71 5G மாடலானது சாம்சங் கேலக்ஸி ஏ71எஸ் 5ஜி ஆக இருக்கலாம். இந்த மாறுபாடு ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மற்றும் “சாத்தியமான” ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ71எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி அளவிலான ரேமை பேக் செய்யும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடலானது அதன் சிங்கிள் ஒற்றை கோர் சோதனையில் 626 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 1,963 புள்ளிகளையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

this year.சாம்சங் கேலக்ஸி ஏ 51 எஸ் 5 ஜி மற்றும் கேலக்ஸி ஏ 71 எஸ் 5 ஜி மாடல்களை நாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் முறை மற்றும் கீக்பெஞ்ச் பட்டியல்கள் அனைத்தும் அப்படியே உண்மையாகி விடாது, சில சமயங்களில் அவைகள் வேறுபடலாம் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இதற்கு முன் கேலக்ஸி A51s 5G அல்லது கேலக்ஸி A71s 5G ஸ்மார்ட்போன்களை பற்றி எந்த ஆதாரத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதால், இந்த புதிய லீக்ஸ்களை சிட்டிகை உப்பில் இருந்து கிள்ளிக்கொள்ளும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நினைவூட்டும் வண்ணம், வெண்ணிலா சாம்சங் கேலக்ஸி ஏ 51 5 ஜி மற்றும் கேலக்ஸி ஏ 71 5 ஜி மாடல்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே