இந்தியாவில் ரெட்மி 8 மார்ட்போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த மாடல் ரூ.9,799 என்கிற விலைக்கு விற்பனையாகிறது. கடந்த மாத தொடக்கத்தில் இதே ஸ்மார்ட்போனின் மீது விலை உயர்வு அறிவிக்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு அக்டோபரில் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,999 க்கும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ 8,999 க்கும் இந்தியாவில் அறிமுகமானது.
இடையில், சியோமி நிறுவனம் ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி மாடலை சத்தமின்றி விற்பனை செய்வதை நிறுத்தியது. எனவே இப்போது இந்தியாவில் ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் மட்டுமே வாங்க கிடைக்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அமைப்பு, வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பு, பின்புறத்தில் “ஆரா மிரர் டிசைன்” போன்ற அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் தேர்வு செய்ய மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களையும் வழங்குகிறது.
இந்தியாவில் ரெட்மி 8 புதிய விலை நிர்ணயம் மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது, கடந்த மாத விலையான ரூ.9,499 க்கு பதிலாக தற்போது ரூ.9,799 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது முந்தைய விலை உயர்விலிருந்து ரூ.300 அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், அதன் விலையில் ஏற்கனவே இரண்டு அதிகரிப்புகளைப் பெற்றிருந்தாலும், இந்த உயர்வுக்கான காரணம் குறித்த எந்த விவரத்தையும் சியோமி இதுவரை வெளியிடவில்லை.
இந்த புதிய விலை நிர்ணயம் Mi.com மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்கிறது. மேலும், ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமும் இது பொருந்தும்.
ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மி 8 ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான MIUI 10 உடன் இயங்குகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடனான 6.22 இன்ச் அளவிலான எச்டி+ டாட் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC உடனாக இது 4 ஜிபி வரையிலான ரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இமேஜிங்கை பொறுத்தவரை, ரெட்மி 8 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 12 மெகாபிக்சல் (எஃப் / 1.8) சோனி ஐஎம்எக்ஸ் 363 முதன்மை சென்சார் + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார்உள்ளன.
பின்புற கேமரா அமைப்பில் உள்ள முதன்மை சென்சார் ஆனது மி மிக்ஸ் 2 எஸ் மற்றும் போக்கோ எஃப் 1 ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற கேமராவை ஒத்திருக்கிறது. மேலும், ப்ரீலோடட் AI போர்ட்ரெயிட் மற்றும் AI Scene Detection போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இதன் கேமராக்கள் ஆனது ஆறு இந்தியாவை சார்ந்த பிரிவுகள் உட்பட 33 scene category-களை அங்கீகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 8 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா சென்சாரை கொண்டு உள்ளது. அது ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு இயங்கும் அம்சங்களையும் கொண்டுள்ளது.
ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பகத்தை சியோமி வழங்கியுள்ளது, இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க உதவும் ஒரு பிரத்யேக ஸ்லாட் ஒன்றையும் கொண்டுள்ளது.
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், infrared, வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றும் உள்ளது.
ரெட்மி 8 ஆனது ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ச்கதியூட்டப்படுகிறது, இது பல்வேறு AI மேம்படுத்தல்களுடன் செயல்படுகிறது மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இருப்பினும், ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் உள்ளது.