2 மாத குழந்தையோடு உயரிய மலையில் ஏற முயற்சித்த சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி 2 மாத குழந்தையோடு கர்நாடகத்தின் உயரிய மலையில் ஏற முயற்சித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

2வது குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆன நிலையில், கர்நாடகாவின் முல்லயங்கிரி என்ற மலையின் அழகிய காட்சிகளைப் பதிவிட்ட சமீரா, தான் தன் குழந்தையோடு அதில் ஏற முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

முல்லயங்கிரி, 6 ஆயிரத்து 300 அடி உயரம் கொண்டதாகக் கூறியுள்ளார். புதிய தாய்மார்களும் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும், தனது பயணப் பதிவுகளுக்கு இத்தகைய பதில் வருவது தனக்கு சிலிர்ப்பு ஏற்படுவதாகவும் சமீரா குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே