முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி வருகை..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைபரவல் அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை மற்றும் கொரோன தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் நிதித்தந்து உதவுமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து, தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற பணத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நேரடியாகவும், இணையவழியிலும் செலுத்தி வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதி தொகைகள் வரவு செலவு கணக்குகள் வெளிப்படைத்தன்மையாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

(17 மே 2021) வரை, தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி பணம் பெறப்பட்டுள்ளது. 

இதில், நேரடியாக ரூ.39.56 கோடி பணம், இணையவழியில் ரூ.29.44 கோடி பணமும் பெறப்பட்டுள்ளது.

இந்த பணத்தில், திரவ ஆக்சிஜன் கண்டைனர் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரெம்டிசிவர் உட்பட பிற மருந்துகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.69 கோடி பணத்தில் இருந்து முதற்கட்டமாக ரூ.50 கோடி செலவிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.19 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினமான (23/05/2021) வரை தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்கு பெறப்பட்ட தொகை ரூ.181 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த தொகையில் ரூ.50 கோடி பணத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் கிட் வாங்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே