கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 134 கோடி வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், நிவாரண உதவிக்காகவும், மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் தங்களால் இயன்ற நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை அளித்தனர்.
தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 134.63 கோடி ரூபாய் நிதி வசூல் ஆகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலமாக 14.10 கோடி ரூபாய் நிதியளித்துள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பாக 1 கோடி ரூபாய், நடிகர் அஜித்குமார் 50 லட்சம் ரூபாய், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்துள்ளனர்.
நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.