திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் ஆறடி நீளமுள்ள வாழையிலையில் 1330 திருக்குறளையும் எழுதி மாணவி ஒருவர் அசத்தியுள்ளார்.
புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவியான தாரணி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழை இலையில் திருக்குறளை எழுதியுள்ளார்.
வாழை இலையின் மருத்துவ குணங்கள் குறித்தும், திருக்குறள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1330 திருக்குறளையும் 6 மணி நேரத்தில் தாரணி வாழை இலையில் எழுதியுள்ளார்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வாழை இலையில் உணவு சாப்பிடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.