இந்தியாவில் ஒரே நாளில் 1,185 பேர் கொரோனாவுக்கு பலி..!!

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,69,743 கடந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 2,17,353 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 15,69,743 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 1,18,302 போ குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து நாடு முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,25,47,866 -ஆக அதிகரித்துள்ளது.

1,185 போ மரணம்: நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,185 போ உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தனா். நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 14 லட்சத்து 73 ஆயிரத்து 210 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மொத்தம் 26 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரத்து 625 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 11,72,23,509 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், தமிழகம், கேரளம், குஜராத், மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகளை சரிவர பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரிடையே அஞ்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே