இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவு சின்னங்களை மே 15 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒரு வருட காலமாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் வீரியம் அண்மையில் குறைந்து வந்த நிலையில், தற்பொழுது இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 2,00,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தியா முழுவதிலும் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 

அதில் ஒன்றாக தொல்லியல் துறையின் கீழ் செயல்படக்கூடிய அனைத்து அருங்காட்சியகம் மற்றும் நினைவு சின்னங்களை மே 15 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் அவர்கள், கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற மே 15 அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொல்லியல் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே