11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வடமாநில இளைஞருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்

அருப்புக்கோட்டை அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வடமாநில இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்ற சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வடமாநில இளைஞர் ஆட்ரூத் மில்லர் என்பவர், மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் இளைஞரை தேடி உள்ளனர்.

வீட்டில் பதுங்கி இருந்த இளைஞரை, கதவை உடைத்து வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே