கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 103 வயது மூதாட்டி

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜெ.காமேஸ்வரி. இதன் மூலம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மூத்த குடிமகள் என்ற அந்தஸ்தை அவர் பெறுகிறார்.

முன்னதாக நேற்று, பெங்களூரு பானர்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

செவ்வாய் (நேற்று) மாலை நிலவரப்பட்டி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதல்கட்ட தடுப்பூசி திட்டத்தில் மருத்துவ, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த மார்ச் 1ம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 2,40,37,644 பேர் தடுப்பூசி செலுதிக்கொண்டுள்ளனர். இவர்களில், 71,13,801 பேர் மருத்துவப் பணியாளர்கள் முதல் டோஸையும், 69,02.006 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.

அதேபோல் முன்களப் பணியாளர்களில் 4,44,199 பேர் முதல் டோஸையும், 49,25,543 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
45 வயதுக்கு மேற்பட்டோர் 8,00,287 பேரும், இணை நோய் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 49,25,543 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே