சென்னை : கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துளார்.

மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த குருமூர்த்தி (55) சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

1986-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் அயல் பணியாக மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ரோந்து பணி பொறுப்பாளராக பணியாற்றினார்.

காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 23ஆம் தேதி குருமூர்த்தி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவருக்கு கோமதி (49) என்ற மனைவியும், அலமேலு மங்கை (25) என்ற மகளும், தினேஷ்குமார் (21) என்ற மகனும் உள்ளனர்.

கொரோனா தடுப்பு முன்களப்பணியாளராக பணியாற்றி வரும் காவல்துறையில் இது 4-வது உயிரிழப்பு.

சென்னை காவல் துறையில் பணியாற்றிய மாம்பலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன், சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் ஆகியோர் இதுவரை கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே