பூண்டி ஏரியில் இருந்து முதல் கட்டமாக 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு..!!

பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருப்பதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கியமான நீர் நிலைகள், ஏரி மற்றும் குளங்கள் நிரம்பின.

இதனால் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திறக்கப்பட்டது.

இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18ஆயிரம் கனஅடியாக உள்ளதால் நீர் வெளியேற்றப்படுவதாகவும், கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே