தலைமை நீதிபதியின் உடல்நிலை சீராக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவர்களுக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நீதிபதி ஏ.பி.சாஹி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு தனி வார்டில் சிறப்பாக சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை நீதிபதியின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு வந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்’ என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே