ஒரே மாட்டுவண்டியில் சென்று 10 பா.ம.க வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

புதுச்சேரியில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பொதுத் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது என பாமக-வினர் குற்றம்சாட்டுகின்றனர்.

புதுச்சேரியில் 10 பா.ம.க வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே மாட்டு வண்டியில் சென்றனர்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ம.க போட்டியிடுகிறது. 10 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ம.க அமைப்பாளர் தன்ராஜ் இன்று அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தன்ராஜ், “புதுச்சேரியில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பொதுத் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பதில் சந்தேககம் இருக்கிறது. பாஜக- என்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு மரியாதை அளிக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். பாமக வேட்பாளர் மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் அலட்சியப்படுத்துவதாகவும் அலைகழிப்பதாகவும்” கூறினார்..

இதனைதொடர்ந்து பா.ம.கவின் 10 வேட்பாளர்களும் ஒரே மாட்டு வண்டியில் ஏறி வேட்பு மனு தாக்கல் செய்ய வன்னியர் சங்க கட்டிடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே