1-ஆம் வகுப்பு மாணவன் சக மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சி

ஹரியானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிர்சாவில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி உடல்நிலை குறைவால் அங்கு உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் நடந்தது குறித்து மாணவியின் தாய்க்கும்,போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மாணவியின் தாயின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தச் சிறுவனின் பெயர் தனக்குத் தெரியாது என்றும் நேரில் பார்த்தால் அடையாளம் காட்டமுடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முகம் தெரியாத சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு பள்ளிக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

One thought on “1-ஆம் வகுப்பு மாணவன் சக மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சி

  • Ada paavi

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே