வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட சிவன் கோவிலின் வாயில்கள் !

உலகிலுள்ள எந்த கோவிலை எடுத்துக்கொண்டாலும் அந்தக் கோவிலுக்கு என்று தனி சிறப்பம்சம் இருக்கத்தான் செய்யும். அதே போன்றுதான் இந்த பசுபதிநாத் கோவிலும். இதில் பல தனிச்சிறப்புகள் அடங்கியுள்ளது.உலகிலுள்ள பெரிய கோவில்களில் ஒன்று தான் இந்த பசுபதிநாத் கோவில். இது ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் பாக்மதி ஆற்றின் கரையோரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை நேபாளின் காசி என்றும் அழைப்பர்.அனைத்து தென்னிந்திய ஆலயங்களில் இருப்பது போன்று, இந்த கோவிலிலும் கர்ப்பகிரகம் உள்ளது. இதில் சிவபெருமான் நான்முக லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.சிவனுக்கு எதிரில் அனைத்து கோவில்களிலும் உள்ளது போன்று நந்தியும் கட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த நந்தி சிலை மிகப் பெரியதாக இருக்கும். இது பித்தளையால் கட்டப்பட்டது..இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால், இந்தக். கோவிலின் வாயில்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டது. கோவிலின் மேலே தங்கத்தால் செய்யப்பட்ட கலசம் ஒன்றும் உள்ளது.

தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் ,கன சதுர வடிவில் மரங்களை கொண்டும் கட்டப்பட்டுள்ளது.பசுபதிநாத் சிலை 6 அடி உயரம் மற்றும் 6 அடி அங்குலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்  யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த கோவில் சீனாவில் உள்ள பகோடா முறைப்படி அனைத்து சிறப்புகளைப் பெற்று கட்டப்பட்டுள்ளது.இந்தக் கோவிலில் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வருகை தந்து சிவனை வழிபடுகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே