அதிபர் ட்ரம்ப் – அதிபர் வேட்பாளர் பைடன் இடையிலான 2-வது விவாதம் ரத்து..!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளர் பைடன் இடையிலான இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தலின் போது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்கு நேர் விவாதம் நடத்துவர்.

அதன் படி அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது வழக்கம்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் முதல் விவாதம் நடைபெற்றது.

விவாதம் முடிந்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தை காணொளி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து ட்ரம்ப் முழுமையாக நீங்கினால் மட்டுமே அவருடன் நேருக்கு நேர் விவாதிக்கப் போவதாக பைடன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

22 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே