வயிற்றில் இருந்த நீர்க்கட்டியை கர்ப்பம் எனக் கூறி 8 மாதங்களாக சிகிச்சை

கல்லாவியை அடுத்த பெருமாள் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் கருவுற்றிருப்பதாக அறிவித்தனர்.

கடந்த 8 மாதங்களாக அஸ்வினிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்த, அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவித்ததாகவும், சத்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தததாகவும் அஸ்வினி கூறுகிறார்.

இந்நிலையில் 8 மாதங்களுக்குப் பின் அஸ்வினிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டது.

அப்போது அஸ்வினியின் வயிற்றில் குழந்தை இல்லை என்றும், நீர்க்கட்டிதான் இருப்பதாகவும் தனியார் மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 

அஸ்வினிக்கு 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது கருவுற்றதாக எண்ணியிருந்த அவரது கணவர் தற்போது அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் அஸ்வினி தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மெத்தனத்தால் ஒரு பெண்ணி வாழ்க்கை கேள்விக்குறியாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே