மடிக்கக்கூடிய புதுவகை செல்போனை அறிமுகம் செய்துள்ள சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய செல்போன் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மத்திய சியோலில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடையில் புதிய மாடலை வாங்குவதற்காக ஏராளமான வாடிக்கையாளர்கள்  வரிசையில் காத்திருந்தனர்.

மடிக்கக்கூடிய செல்போனின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். தேவையான அளவுக்கு செல்போன் திரையை மாற்றியமைக்க முடிவதால் திருப்திகரமாக உள்ளது என்று ஏற்கனவே சாம்சங் கேலக்சி நோட் செல்போன் பயன்படுத்திய வாடிக்கையாளர் தெரிவிக்கிறார். ஆனால் விலைதான் சற்று அதிகமாக உள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மடிக்கக்கூடிய இந்த செல்போனில் ஒரே நேரத்தில் 3 செயலிகளை பயன்படுத்த இயலும். இதனால் பயனாளர்கள் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது. செல்போனை மூடும் போது வெளிபுறத்திரையில்  செயலியின் தொடர்ச்சி எதிரொலிப்பது இந்த புதிய மாடலின் சிறப்பு அம்சமாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே