தங்கம் வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.

சென்னை தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று காலை நேர நிலவரப்படி,

  • 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,012-க்கும்,
  • சவரன் ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கும்,
  • 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.42,110க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.

உலகளவில் தங்கத்தின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டதாலும், தங்கத்தின் மீதான தேவை மற்றும் அதன் மீதான முதலீடு அதிகரித்திருப்பது காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே