பகலில் பெண்கள் நைட்டி அணிந்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்ட புதிய கிராமம்.

பெண்கள் இரவில் அணிவதற்காக தயார் செய்யப்பட்ட உடையை நைட்டி. இப்பொழுது பெண்கள் பெருமளவில் பகலிலும் நைட்டி அணிவது வழக்கமாக உள்ளது.

மேலும் வீட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு கூட பெண்கள் நைட்டி அணிந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு, கோதாவரி மாவட்டம் தொகளபள்ளி கிராமத்தை சேர்ந்த வட்டி என்ற மலைவாழ் மக்கள் ஒன்று கூடி 9 நபர்கள் கொண்ட குழுவை தேர்ந்தெடுத்தனர்.

இந்த குழுவின் தலைமையில் நடந்த ஊர் பஞ்சாயத்து கூட்டத்தில் பகலில் நைட்டி படிவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி விவாதித்து ஒரு தீர்வு கொண்டு வந்தது. 

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதமும், அதனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது ஊர் மக்கள் எவரும் அந்த ஒன்பது கிராம மக்களை காட்டிக் கொடுக்கவில்லை என்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே