நிறுத்தப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன் – அமைச்சர் காமராஜ்

பருப்பு, பாமாயில்- க்கு நிறுத்தப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை 24 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இடம் அமைச்சர் காமராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் காமராஜ் மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பருப்பு பாமாயில்- க்கு நிறுத்தப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே