காதல் விவகாரம் தொடர்பாக மாணவி மீது ஆசிட் வீசிய மாணவன்

கடலூர் மாவட்டத்தில் மாணவி மீது ஆசிட் வீசிய மாணவனை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கதிராமங்கலம், நடுவெளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி மகள் சுசித்ரா, 19 வயதான இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அதே கல்லூரியில் படித்து வரும் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பழைய கூடலூர் பகுதியை சேர்ந்த 23 வயதான முத்தமிழன் என்பவன், சுசித்ராவை கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையே சுசித்ரா கடந்த 10 நாட்களாக வேறு ஒருவரை காதலித்ததாகவும், அது குறித்து கேள்வி எழுப்பிய முத்தமிழன் இடம் மாணவி செருப்பை காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன் கடந்த 9ம் தேதி சுசித்திரா மீது ஆசிட் வீசினார். இதை எடுத்து முத்தமிழனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூரி அபினவ் , குற்றவாளி முத்தமிழனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதற்க்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, முத்தமிழனை ஓராண்டுகாலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே