காக்னிசன்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ. 2,900 கோடி வருமான வரி நிலுவை

காக்னிசன்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய 2,900 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை யில் 490 கோடி ரூபாய் 4 வாரங்களுக்குள் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா – மொரிசியசில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்பனை செய்திருந்த 94 லட்சம் பங்குகளை திரும்ப பெற்றது. அதற்காக 19415 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது.

இதற்க்கு 15 சதவிகுத வரியாக 2912 கோடி ரூபாய் செலுத்த கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை ரத்து செய்யக்கோரி காக்னிசன்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

நோட்டீசை எதிர்த்து முறையீடு செய்ய வருமானவரித் துறையில் பல வாய்ப்புகள் உள்ள நிலையில் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகிய தாகக் கூறி தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். வரி நிலுவையில் 490 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்தவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக காக்னிசன்ட் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று உத்தரவிட்ட நீதிபதிகள், வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து நேரடியாக நீதிமன்றத்தை அணுகியதை ஏற்க முடியாது என்று தெரிவித்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.

தனி நீதிபதி உத்தரவின்படி 4 வாரங்களில் 490 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.

காக்னிசன்ட் நிறுவனம் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடவும், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே