மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது; கமல்ஹாசன் ட்வீட்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில், தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த இயலாது என்றும், மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பானது பலத்த வரவேற்பை பெற்று, பல கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். 

தமிழக அரசின் திட்டவட்ட அறிவிப்பு மத்திய அரசுக்கு கட்டாயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் கமல் ஹாசன் ட்விட் பதிவு செய்துள்ளார்.

அவரது ட்விட்டில், ” மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் ” என்று கூறியுள்ளார்..

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே