நாட்டின் மிகப்பெரும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் ஆகியவை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட EMI சலுகைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 21 வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், வங்கிக் கடன்களுக்கு EMI செலுத்துவதிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில், இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் SBI வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கென ஒரு இ-மெயிலை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இச்சலுகை தேவையில்லை என நினைக்கும் வாடிக்கையாளர்கள், வழக்கம்போல் தங்கள் EMI தொகையைச் செலுத்தலாம் என்றும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

இதேபோல், HDFC மற்றும் ICICI வங்கிகளும் EMI சலுகை தொடர்பான அறிவிப்பை தங்கள் வெப்சைட்டுகளில் அறிவித்துள்ளன.

இது தொடர்பான ஒரு விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே