மசால் தோசை பிரியர், ஆஸ்திரேலிய வேகப்பந்து லெஜண்ட் தாம்சனின் மாணவர்:

ஐபிஎல் கிரிக்கெட், இந்தியாவின் அபாரமான உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பினால் வேகப்பந்து வீச்சில் நன்றாக வந்துள்ள பிரசித் கிருஷ்ணா ஒரு மசால் தோசைப்பிரியர் என்கிறார் அவரது தந்தை, இதோடு மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் ஒரு கால அச்சுறுத்தல் அதிவேக பந்து வீச்சாளர் லெஜண்ட் ஜெஃப் தாம்சன் வேகப்பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் வைகிங்கர்.

ஐபிஎல் கிரிக்கெட், இந்தியாவின் அபாரமான உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பினால் வேகப்பந்து வீச்சில் நன்றாக வந்துள்ள பிரசித் கிருஷ்ணா ஒரு மசால் தோசைப்பிரியர் என்கிறார் அவரது தந்தை, இதோடு மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் ஒரு கால அச்சுறுத்தல் அதிவேக பந்து வீச்சாளர் லெஜண்ட் ஜெஃப் தாம்சன் வேகப்பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் வைகிங்கர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோ, ஜேசன் ராய் வெளுத்து வாங்க 3 ஓவர்களில் 37 ரன்களைக் கொடுத்து ஏமாற்றமளித்தார், ஆனால் துவண்டு விடாத பிரசித் கிருஷ்ணா அதன் பிறகு ஜேசன் ராயை வீட்டுக்கு அனுப்பி 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சாதனை ஒருநாள் சர்வதேசப் போட்டியாக மாற்றினார். யார் இந்த பிரசித் கிருஷ்ணா என்று உலகைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்தியா அன்று 66 ரன்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்தவர். 135/0 என்று இங்கிலாந்து அபாரமாகச் சென்று கொண்டிருந்த போது இவரது 4 விக்கெட்டுகளால் நிலைதடுமாறி சரிந்த இங்கிலாந்து அடுத்த 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251-க்கு ஆல் அவுட் ஆனது.

2018 ஐபிஎல் தொடரில் கமலேஷ் நாகர் கோட்டி காயமடைந்ததால் பிரசித் கிருஷ்ணாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. பிரசித் கிருஷ்ணாவிடம் பேட்ஸ்மென்களை திக்குமுக்காடச் செய்யும் கூடுதல் வேகம் இருந்தது.

எனவே ஐபிஎல் மட்டுமல்லாது இந்தியாவின் பிரமாதமான உள்நாட்டுக் கிரிக்கெட்டும் இவரது வளர்ச்சியில் பங்களித்துள்ளது, ஆனால் நமக்குத் தெரியாத ஒன்று ஜெஃப் தாம்சனிடம் ஆஸ்திரேலியாவிலேயே பயிற்சி பெற்றவர். தாம்சன் என்றால் 1970-களில், 80களில் பயங்கரம். ஆளடி பவுலர்தான், கடும் வேகம். இங்கிலாந்தை சொல்லி சொல்லி வீழ்த்துவார்.

அந்த வேகப்புயல் லெஜண்ட் ஜெஃப் தாம்சனின் மாணவர்தான் பிரசித் கிருஷ்ணா. 2017-ல் ஐடிபிஐ பெடரல் பவுலிங் ஃபவுண்டேஷன் அங்கமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் துஷார் பாண்டே ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தாம்சன் அகாடமிக்கு ஆஸ்திரேலியா சென்று பயிற்சி பெற்றனர்.

கிரிக்கெட் எழுத்தாளர் மகரந்த் வைகிங்க்கர் கூறும்போது, பிரிஸ்பனில் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அகாடமியிலும் பயிற்சி பெற்றவர் பிரசித் கிருஷ்ணா என்று கூறியதோடு பிரசித் மிகவும் புத்திசாலித்தனமான பவுலர் என்றார்.

எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு அகாடமியில் மற்றொரு லெஜண்ட் கிளென் மெக்ராவிடமும் பயிற்சி பெற்றவர் பிரசித் கிருஷ்ணா.

பிரசித் கிருஷ்ணாவின் தந்தை தன் மகனைப் பற்றி கூறும்போது, “11 வயதில் பிரசித் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தான். ஸ்கூல் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர். 14 வயதில் வேகப்பந்து வீச்சை சீரியஸாக எடுத்துக் கொண்டான். பிரசித் பிரெட் லீயின் பெரிய விசிறி. அவரைப்போலவே தீப்பொறி பறக்க வீச விரும்புவான். மசாலா தோசை என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே