சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் பைக் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அதன் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஸ்மார்ட் பைக் திட்டம் என்னும் வாடகை சைக்கிள் முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் நிறுத்தங்களில் ஸ்மார்ட் பைக் சேவை தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் வாடகை சைக்கிள் கிடைப்பதால் பொதுமக்களிடையே இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை மேலும் ஐந்து மணி நேரத்திற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது. இதுவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைத்து வந்த ஸ்மார்ட் பைக்யை இனி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தலாம். மேலும் தற்போது 25 இடங்களில் 250 சைக்கிள்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் எண்ணிக்கையில் ஐந்து ஆயிரமாக உயர்த்த திட்டம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.