வெற்றியுடன் தொடங்குமா இந்தியா…!!!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று  நடக்கிறது.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.

கடந்த 15-ந்தேதி தர்மசாலாவில் இரு அணிகள் இடையேயான முதல் இருவது ஓவர் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும்  இரண்டாவது 20 ஓவர் போட்டி  மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இந்தியா உள்ள நிலையில், தென்ஆப்பிரிக்காவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளதால் இன்றைய ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே