பெங்களூரு ஃபுட் ஸ்ட்ரீட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

பெங்களூரின் பிரசித்தி பெற்ற விவிபுரம் ஃபுட் ஸ்ட்ரீட் என்றழைக்கப்படும் உணவு வீதியில் குப்பைகள் குவிந்து மாநகராட்சிக்கு தினமும் சுத்தம் செய்வதில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன.

பல வகை ருசியான உணவுகள் ஒரே வீதியில் கிடைப்பதால் குடும்பத்தினருடன் உணவருந்த ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். இதனால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தன.

இப்பகுதியை அண்மையில் கர்நாடக அரசு பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்து, பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது. இதையடுத்து இங்கு பிளாஸ்டிக் புழக்கம் குறைந்திருப்பதாக பாஜக எம்பியான தேஜஸ்வி சூர்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் இப்பகுதியில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நடந்து செல்வோருக்கான இடமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே