இந்துத்துவா அமைப்பின் தலைவர் வீர் சாவர்க்கர் குறித்து ராகுல் மற்றும் சோனியா கூறிய கருத்து பற்றி விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீர் சாவர்க்கரை துரோகி என்று குறிப்பிட்டிருந்தாக அவரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் அந்த ட்விட்டரில், சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கோரியதாகவும், அவர் அந்தமானில் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருக்க விரும்புவதாகவும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் பதிவு சாவர்க்காரின் புகழைக் குறைக்கும் வகையில் இருப்பதாக போய்வடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சிவாஜிநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.