வீடு புகுந்து மிரட்டிய பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொலை

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

காஷ்மீரில் வீடுபுகுந்து ஒருவரை பணயக் கைதியாக பிடித்து வைத்து மிரட்டிய பயங்கரவாதிகள் மூன்று பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தின் பட்டோட்டே என்ற ஊர் வழியாக இன்று அதிகாலை சென்ற ஒரு வாகனத்தை சில பயங்கரவாதிகள் வழிமறிக்க முயன்றனர்.

ஆனால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பினார். இதன் பின்னர் அவர், சற்று தொலைவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அருகாமையில் உள்ள டோடா, கந்தர்பால் ஆகிய இடங்களையும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மீது சிலர் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனிடையே கந்தர்பால் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே படோடே நகரின் பஜாரின் புகுந்த மூன்று பயங்கரவாதிகள், ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த ஒருவரை பணயக் கைதியாக பிடித்து வைத்தனர். அந்த வீட்டை சுற்றி வளைத்த ராணுவத்தினர், அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதில் வீட்டுக்கார ர் பத்திரமாக மீட்கப்பட்டார். பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், பயங்கரவாதிகள் தாக்கியதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் பலியானார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை வீழ்த்திய மகிழ்ச்சியை முழக்க மிட்டு ராணுவத்தினர் கொண்டாடினர்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே