விமரிசையாக நடைபெற்ற சேலம் அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் மகன் திருமண விழா

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் மகன் திருமணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

சேலம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மகன் ஜனார்த்தனன் மற்றும் தொழிலதிபர் சண்முகத்தின் மகள் சவுந்தர்யா ஆகியோர் திருமண புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மணமகனுக்கு தாலி எடுத்துக்கொடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி. விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், எம்ஆர் விஜயபாஸ்கர், காமராஜ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தொடர்ந்து மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, ஓமலூர் எம்எல்ஏ சக்திவேல், ஆத்தூர் எம்எல்ஏ சின்ன தம்பி, வீரபாண்டி மனோன்மணியம், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ சக்திவேல், ஆற்காடு எம்எல்ஏ சித்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே