விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

சிந்தாமணியூர் கிராமத்தில் களிமண், பேப்பர் கூழ் மற்றும் கிழங்கு மாவுகளை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் புதுவரவாக தங்க விநாயகர், குதிரைவண்டி விநாயகர், கற்சிலை விநாயகர் ,சங்கு விநாயகர் மற்றும் காளை மீது நடனமாடும் விநாயகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு, 100 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவை பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரித்த சிலைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே