விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வரும் 61 அடி உயர விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் மிக உயரமான விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதற்கான இறுதிகட்ட பணிகளில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 61 அடி உயரமுடைய இந்த விநாயகர் சிலை, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிரம்மாண்டமான சிலையாக கருதப்படுகிறது. இந்த சிலையின் சொரூபமாக உள்ள விநாயகருக்கு சூரிய ஒளி வீசும் முகத்துடன் பன்னிரண்டு தலைகளும், இருப்பத்தினான்கு கரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏழு குதிரைகளில் அந்த விநாயகர் வலம் வருகிறார். இந்த சிற்பத்திற்கு “சூரிய அவதாரம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே