விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை ஸ்ரீபிரியா

நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் உருவ கேலி கிண்டல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார், குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் அடுத்தவர்களின் உருவங்களை கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் அநாகரிகமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களை விரிவாக பார்க்கலாம் ‘விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் ஒருவரின் மூக்கை கேலி செய்வதும் எடையை கேலி செய்வதும் சரியில்லை மா கா பா மற்றும் பிரியங்கா அவர்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளித்தது உண்மைதான் ஆனால் நீங்கள் உங்களை வேண்டுமானால் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்கப்படுத்த உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது, நேரம் கிடைக்கும் சமயங்களில் நான் அதிகம் பார்ப்பது விஜய் டிவி தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது மிகவும் சோகம். மாற்றிக்கொள்வார்களா ? ஒருவரைக் கேலி செய்து காமெடி செய்வது கேவலம் என்னுடன் டுவிட்டரில் இணைந்து நிற்கும் நாலு லட்சத்தி 95 ஆயிரம் மக்களும் உருவ கேலியை எதிர்ப்போம்.. நான் பலமுறை உருவ கேலிக்கு ஆளாகி இருக்கிறேன் இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்த வரை நான் கடுமையாக கண்டித்து இருக்கிறேன் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்‘ என்று ஆதரவு கோரியிருக்கிறார் .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 403 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே